பிறந்த குழந்தையின் சடலம், ஆற்றோரத்தில் கண்டெடுப்பு

தைப்பிங்,அக்டோபர் 03-

தொப்புள்கொடி அவிழ்க்கப்படாத நிலையில் வீசப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் குழந்தையின் சடலம் ஒன்று, நேற்று புதன்கிழமை, தைப்பிங்கில், Latur, ஆற்றோரத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.

குழந்தை பிரசவிக்கப்பட்ட நிலையில், உடல் உபாதை காரணமாக நேற்று அதிகாலை 3.32 மணியளவில் தைப்பிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 43 வயது கம்போடியா மாது, தன்னுடன் குழந்தையை கொண்டு வராதது கண்டு பிடிக்கப்பட்டது.

இது குறித்து மருத்துவர்கள் நடத்திய விசாரணையில் அந்த அந்நிய மாது, இறந்து விட்ட குழந்தையை, பிறந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே காகிததால் சுற்றப்பட்டு ஆற்றோரத்தில் வீசிவிட்டதாக தெரிவித்துள்ளார். பின்னர் இது குறித்து மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர் என்று தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது நசீர் இஸ்மாயில் தெரிவித்தார்.

Larut- டில் உள்ள ஆற்றோரத்தில் போலீசார் மேற்கொண்ட சோதனையின் போது குழந்தை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. எனினும் அந்தக் குழந்தை இறந்து விட்டது மருத்துவ குழுவினரால் உறுதி செய்யப்பட்டது.

புலன் விசாரணைக்கு ஏதுவாக அந்த மாதுவின் காதலன் என்று நம்பப்படும் 34 வயத நோபாளப் பிரஜை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக ஏசிபி முகமது நசீர் இஸ்மாயில் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS