ஷா ஆலம், அக்டோபர் 03-
மலேசியாவின் 17 ஆவது மாமன்னராக சுல்தான் இப்ராஹிம், கடந்த ஜுலை 20 ஆம் தேதி மூடிசூடிக்கொண்டதைத் தொடர்ந்து அந்த வரலாற்றுப்பூர்வமான நிகழ்வையொட்டி மலேசிய மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியா ஞாபகர்த்த சிறப்பு நாணயங்களை வெளியிட்டுள்ளது..
தங்கம், வெள்ளி மற்றும் B.U. Nordic தங்கம் என மூன்று வகையான சிறப்பு நாணயங்கள் வெளியிடப்படடுள்ளதாக அந்த மத்திய வங்கி அறிவித்துள்ளது.
999.9 தங்க ரகம் கொண்ட 8 கிராம் காசு 100 ரிங்கிட் மதிப்பைக்கொண்ட மூவாயிரத்து 250 ரிங்கிட்டிற்கு விற்பனை செய்யப்படும். அதேவேளையில் 92.5 எடை கொண்ட 31 கிராம் வெள்ளிக்காசு 275 ரிங்கிட்டிற்கு விற்பனை செய்யப்படும்.
வெண்கலத்தால் செய்யப்பட்ட 8.5 கிராம் கொண்ட B.U. Nordic தங்ககாசு 16 ரிங்கிட் 50 காசுக்கு விற்பனை செய்யப்படும் என்று பேங்க் நெகாரா மலேசியா அறிவித்துள்ளது. இந்த சிறப்பு நாணயங்களை பொது மக்கள் நேற்றுத் தொடங்கி இம்மாதம் 30 ஆம் தததி வரை duit.bnm.gov.my என்ற அகப்பக்கத்தின் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அது அறிவித்துள்ளது.