அலோர் ஸ்டார்,அக்டோபர் 03-
கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 25 குடும்பங்களைச் சேர்ந்த 89 பேராகக் குறைந்துள்ளது. நேற்றிரவு 28 குடும்பங்களைச் சேர்ந்த 97 பேர் நிவாரண மையங்களில் தங்கியிருந்தனர்.
பாதிக்கப்பட்ட அனைவரும் கோத்த ஸ்டார் மாவட்டத்தில் உள்ள அலோர் மேரா தேசிய பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கெடா பொது தற்காப்புப்ப் படையின் துணை இயக்குநர் மேஜர் முஹம்மது சுஹைமி முஹம்மது ஜைன் கூறினார்,
இதற்கிடையில், கோத்தா ஸ்டாரில் உள்ள சுங்கை கெடா ஆற்றின் நெடுஞ்சாலை பாலத்தில் நீர் மட்டம், எச்சரிக்கை அளவான 1.77 மீட்டரை தாண்டியதாக வடிகால் மற்றும் நீர்ப்பாசன துறையின் பொது தகவல் அகப்பக்கம் தெரிவித்தது.