குளுவாங் , அக்டோபர் 03-
பாரிசான் நேஷனலுக்கும், பக்காத்தான் ஹராப்பானுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் ஜோகூர் மாநிலம், நேடியாக கட்டுப்பட்டு இருக்கவில்லை என்று அம்னோ உதவித் தலைவர் டத்தோ நூர் ஜஸ்லான் முகமது தெரிவித்தார்.
பாரிசான் நேஷனலுக்கும், பக்காத்தான் ஹராப்பானுக்கும் இடையிலான அரசியல் ஒத்துழைப்பின் காரணமாக ஜோகூர் மாநிலத்தில் ஒற்றுமை அரசாங்கம் ஆட்சி அமைய வேண்டும் என்று அமானா கட்சி விடுத்து வருகின்ற கோரிக்கை தொடர்பில் நூர் ஜஸ்லான் பதில் அளித்தார்.
பக்காத்தான் ஹராப்பான் உண்மையிலேயே நேர்மையாகவும், நியாயமாகவும் செயல்படுகிறது என்றால் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு நல்கி வரும் சரவா முதலமைச்சர் டான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி துன் ஓபங் , தமது தலைமையிலான சரவா GPS மாநில ஆட்சியை , ஒற்றுமை அரசாங்க ஆட்சியாக மாற்ற வேண்டும் என்று அந்த முதலமைச்சரவை வலியுறுத்தும்படி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று நூர் ஜஸ்லான் வலியுறுத்தினார்.