இஸ்லாமாபாத்,அக்டோபர் 03-
மலேசியா – பாகிஸ்தான் நாடுகளின் இரு வழி உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று இரவு பாகிஸ்தான் சென்றடைந்தார்.
பிரதமர் தலைமையிலான மலேசிய பேராளர்கள் குழுவிற்கு மகத்தான வரவேற்பு நல்கப்பட்டது. கடந்த 67 ஆண்டு காலமாக மலேசியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நல்லுறவு மலர்ந்து வருகிறது.
மலேசியாவின் பேராளர்கள் குழுவிற்கு தலைமையேற்று சென்றுள்ள டத்தோஸ்ரீ அன்வாரின் சிறப்பு விமானம் நேற்றிரவு பாகிஸ்தான், சக்லாலா, ராவல்பிண்ட், நூர் கான் ஆகாயப்படை விமானத் தளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரையும், மலேசிய பேராளர்கள் குழுவையும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எதிர்கொண்டு வரவேற்றார். பிரதமரின் இந்த மூன்று நாள் அதிகாரத்துவப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.