தவாவ் , அக்டோபர் 03-
சபா, தவாவ் – வில் கடந்த வியாழக்கிழமை ஒரு கிராமத்தில் 12 வயது சிறுமியை மாறி, மாறி பாலியல் பலாத்காரம் செய்ததாக 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்கள் தாவாவ், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
அந்த இரண்டு சிறுவர்களும் நீதிமன்ற உதவிப் பதிவதிகாரி முகமது அபிஸ் ஹுசைரி அயோப் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, அவ்விருவரிடமும் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
நீதிமன்றத்தில் சார்வு செய்யப்பட்ட குற்றவியல் பத்திரிகையின்படி அந்த இரண்டு சிறுவர்களும் சம்பந்தப்பட்ட கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் இரவு 9.40 மணியளவில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறைளத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 76 ஆவது பிரிவின் கீழ் இருவரும் குற்றச்சாட்டப்பட்டுள்ளனர்.