12 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்

கோலாலம்பூர், அக்டோபர் 03-

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கேளிக்கை மையம் ஒன்றில் உல்லாசமாக திளைத்திருந்த அரச மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்த 12 அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு கெடா மாநிலத்தில் உள்ள ஒரு கேளிக்கை மையத்தில் Op Noda என்ற பெயரில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் மேற்கண்ட போலீஸ்காரர்கள் பிடிபட்டதாக ஐஜிபி தெரிவித்தார்.

போலீஸ் படையில் தங்களை இணைத்துக்கொண்ட போலீஸ்காரர்கள் மற்றும் அதிகாரிகள், அந்த படையின் மாண்புக்கு ஏற்ப தங்களின் நடத்தையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

கட்டொழுங்கில் சீர்குலைவு ஏற்பட்டால் இது போன்ற கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS