கோலாலம்பூர், அக்டோபர் 03-
வெள்ளத்தின் போது சொத்துகளுக்கு அதிக சேதமும்
உயிர்ப்பலியும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக வெள்ள அபாய எச்சரிக்கை ஒலி முறையை இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சு மேம்படுத்தவுள்ளது.
2024/2025 ஆம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை இவ்வாண்டு நவம்பர் மாதம் தொடங்கி அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த முன்னெச்சரிக்கை சமிக்ஞை முறையை தரம் உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் சிங் து கிம் கூறினார்.


கடந்த 2021ஆம் ஆண்டு இறுதியில் நாட்டில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தின் மூலம் கிடைத்த அனுபவம் எச்சரிக்கை ஒலி முறையை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்குரிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்தார்.


