முன்னாள் காதலியின் வீட்டை சேதப்படுத்திய ஆடவருக்கு ஓராண்டு சிறை

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 03-

முன்னாள் காதலியின் வீட்டை அடித்து நொறுக்கியதுடன், அவரை மிரட்டிய குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு அம்பாங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது.

Imran Othman என்ற அந்த நபர், கைது செய்யப்பட்ட தினமான செப்டம்பர் 25 ஆம் தேதியிலிருந்து அவரின் தண்டனைகாலம் அமலுக்கு வருவதாக மாஜிஸ்திரேட் அமலினா பாசிரா உத்தரவிட்டார்.

அந்நபர் கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி சிலாங்கூர், தமன் மேலாவதி -யில் உள்ள தமது முன்னாள் காதலியின் தந்தை வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.

WATCH OUR LATEST NEWS