அலோர் ஸ்டார்,அக்டோபர் 03-
லங்காவியில் சுற்றுப்பயணிகளை வெகுவாக கவரும் குணங் மச்சிஞ்சாங் மலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள Eagle’s Nest Skywalk ஆகாய கண்ணாடி நடைப்பாதையில் பராமரிப்புப்பணியில் ஈடுபட்டு இருந்த டெக்னிஷன் ஒருவர் கீழே விழுந்து பரிதாபமாக மாண்டார்.
இன்று மதியம் 12.25 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் அந்த நிறுவனத்தின் பணியாளரான 41 வயது கைருல் நிஜாம் ஜாஃபர் என்பவரே இறந்ததாக போலீசார் அடையாளம் கூறினர்.
சுமார் 50 மீட்டர் உயரித்திலிருந்த வனப்பகுதியில் விழுந்ததாக நம்பப்படும் அந்த டெக்னிஷனின் உடல், தீயணைப்பு, மீட்புப்படையின் தீவிர தேடுதல் பணிக்குப்பின்னர் இன்று மாலை 5.11 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டதாக லங்காவி மாவட்ட போலீஸ் தலைவர்ஏசிபி ஷரிமான் ஆஷாரி தெரிவித்தார்.
சவப்பரிசோனைக்காக அவரின் உடல் லங்காவி, சுல்தானா மலிஹா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.