கோலாலம்பூர், அக்டோபர் 04-
United Kingdom மற்றும் ஜப்பானுக்கு அலுவல் பயணம் மேற்கொள்வதற்கு தமது கடப்பிதழை நீதிமன்றத்திலிருந்து தற்காலிகமாக பெறுவதில் முன்னாள் நிதி அமைச்சர் துன் டாயிம் ஜைனுதீனின் துணைவியார் நைமா காலித் இன்று வெற்றி பெற்றார்.
67 வயது நைமா காலித் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு துணை பப்ளிக் பிராசிகியூட்டர் மசியா மொஹைட் ஆட்சேபனை தெரிவிக்காததைத் தொடர்ந்து கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி, Azura Alwi- அந்த விண்ணப்பத்திற்கு அனுமதி அளித்தார்.
இன்று தொடங்கி, வரும் நவம்பர் 11 ஆம் தேதி வரையில் நைமா காலித், தனது கடப்பிதழை வைத்திருப்பதற்கு நீதிமன்றம் அனுமதிப்பதாக Azura Alwi குறிப்பிட்டார்.
தனது சொத்து விபரங்களை அறிவிப்பதில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சட்டத்தைப் பின்பற்றவில்லை என்று கூறி, ஒரு தொழில் அதிபரும் , வழக்கறிஞருமான நைமா காலித் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.