கோலாலம்பூர், அக்டோபர் 04-
பிரபல தொழில்முனைவரும், AirAsia விமான குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரியுமான டான் ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் மலாயா பல்கலைக்கழகத்தில் மூன்று ஆண்டு கால தவணைக்கான துணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விமானப் போக்குவரத்துத் துறையிலும், வணிகத்துறையில் டோனி பெர்னாண்டஸ் கொண்டுள்ள பரந்த அனுபவம் மற்றும் ஆற்றல், மலாயாப் பல்கலைக்கழகத்தின் உயர் கல்விப் போதனைக்கு விலைமதிப்பற்ற நுண்ணறிவுகளையும் உத்வேகத்தையும் தரும் என்று அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டத்தோஸ்ரீ டாக்டர் நூர் அசுவான் அபு ஒஸ்மான் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பல்வேறு தொழில் துறைகளில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், துணைப் பேராசிரியராக நியமிக்கப்ட்டுள்ள டோனி பெர்னாண்டஸ் , மாணவர்களுக்கு தொழில் நிபுணத்துவத்திற்கான ஈடு இணையற்ற கல்வி அனுகூலங்களை வழங்குவார்
இது நிஜ உலக வணிக நடைமுறைகளுடன் கல்வியறிவை இணைக்கும் என்று தாம் நம்புவதாக நூர் அசுவான் குறிப்பிட்டார்