இஸ்லாமாபாத் , அக்டோபர்
பாகிஸ்தானுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு அந்நாட்டின் மிக உயரிய விருதான நிஷான்-இ-பாகிஸ்தான் எனும் விருது வழங்கி, கெளரவிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான், இஸ்லாமாபாத் – டில் உள்ள அதிபர் மாளிகையில் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இவ்விருதினை வழங்கி சிறப்பு செய்தார்.
பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய தெற்காசிய நாடுகளுக்கு அலுவல் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், இன்று காலையில் மரியாதை நிமித்தமாக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி – யுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது, அவருக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டது.