மாதுவை அச்சுறுத்தியதாக லான்ஸ் காப்பரல் மீது குற்றச்சாட்டு

செரன்பன், அக்டோபர் 04-

மாது ஒருவரிடம் பணம் கேட்டு,அச்சுறுத்தியதாக லான்ஸ் கார்போரல் அந்தஸ்தைக் கொண்ட போலீஸ்காரர் ஒருவர், சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

36 வயது அஹ்மத் முவாஸ் முகமது சுப்ரி என்ற அந்த லான்ஸ் கார்போரல் , கடந்த ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் நீலாயில் உள்ள ஓர் அடுக்கமாடி வீடமைப்புப்பகுதியின் கார் நிறுத்தும் இடத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

போலீசாரிடம் பிடிபட்ட 31 வயதுடைய அந்த மாதுவிடம் பணம் கேட்டு,அச்சுறுத்தியதாக அந்த போலீஸ்காரருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 384 பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS