கோலாலம்பூர், அக்டோபர் 04-
பகாங், பேகன் மாவட்ட போலீஸ் நிலையத்தில் தடுப்புக்காவல் அறையில் இறந்த விசாரணைக்கைதி ஒருவரின் இறப்பு, திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் நேர்மை மற்றும் தர இணக்கத்துறை இலாகா அறிவித்துள்ளது.
அந்த நபர், தூக்கில் தொங்கி, உயிரை மாய்த்துக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த மே 4 ஆம் தேதி அதிகாலை 3.10 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
25 வயதுடைய அந்த நபர் இறந்து விட்டதை பெக்கன், தெங்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளதாக அவ்விலாகாவின் இயக்குநர் டத்தோஸ்ரீ அஸ்ரி அஹ்மட் தெரிவித்தார்.
அந்த நபரின் உடலில் நடத்தப்பட்ட சவப்பரிசோதனையில் தூக்கில் தொங்கியதன் விளைவாக அவர் இறந்து இருக்கிறார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ அஸ்ரி குறிப்பிட்டார்.