சமூக வலைத்தள பங்கேற்பில் கலந்து கொள்ளக்கூடாது

கோலாலம்பூர் அக்டோபர் 04-

பொதுச் சேவைத்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் பொது மக்கள் பங்கேற்கக்கூடிய சமூக வலைத்தள பதிவேற்றத்தில் பங்கேற்கக்கூடாது என்று அரசாங்க தலைமைச் செயலாளர் Tan Sri Shamsul Azri Abu Bakar உத்தரவிட்டுள்ளார்.

தத்தம் அமைச்சு மற்றும் இலாகாக்களின் அனுமதி கிடைத்தாலொழிய விருப்பம் போல் சமூக வலைத்தள பங்கேற்பில் இடம் பெறக்கூடாது என்று அரசாங்க உயர் அதிகாரிகளுக்கு இன்று நினைவுறுத்தியுள்ளார்.

இந்த உத்தரவை மீறும் அரசாங்க உயர் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

WATCH OUR LATEST NEWS