கங்கர், அக்டோபர் 04-
கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி பெர்லிஸ், ஆராவ்-வில் போலீஸ்காரர் ஒருவரை கொலை செய்ய முயற்சி செய்ததாக ஐந்து ஆடவர்கள் இன்று கங்கார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
20 க்கும் 36 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐவரும் மாஜிஸ்திரேட் Nurshahida Abdul Rahim முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
Arau, Taman Jejawi, Jalan Satu, Permai 2- இல் உள்ள ஒரு கண்ணாடி கடை அருகில் அந்த ஐவரும் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
