கோலாலம்பூர், அக்டோபர்
இந்திய சமூக கூட்டுறவு மாநாடு ஒன்று வரும் அக்டோபர் 13 ஆம் தேதி கோலாலம்பூரில் Bank Rakyat இரட்டைக் கோபுர கட்டடத்தில் நடைபெறவிருக்கிறது.
தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் துணை அமைச்சர் டத்தோ R. ரமணன் அறிவித்துள்ளார்.
மலேசிய கூட்டுறவுக்கொள்கை குறித்த இந்திய சமுதாயம் அறிந்துக்கொள்ளும் பொருட்டு இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.
