கோலாலம்பூர், அக்டோபர் 04-
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் MyKad மற்றும் பிறப்புச்சான்றிதழ் போன்ற முக்கிய ஆவணங்கள் சேதமுற்று இருக்குமானால் அவற்றை தேசிய பதிவு இலாகா அலுவலகமான JPN- னில் இலவசமாக மாற்றிக்கொள்ள முடியும் என்று உள்துறை அமைச்சர் datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்த இலவச சேவை பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில் தொடர்ந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு, வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்தவர்கள், வெள்ளம் வடிந்தப்பின்னர் JPN அலுவலகத்திற்கு வருகைப் புரிந்து தங்களின் முக்கிய ஆவணங்களை மாற்றிக்கொள்ள முடியும் என்று சைபுடின் தெரிவித்தார்.
