வங்காளதேசம் வந்தடைந்தார் பிரதமர் அன்வார்

டாக்கா, அக்டோபர் 04-

தெற்காசிய நாடுகளுக்கான தமது வருகையின் ஒரு பகுதியாக பாகிஸ்தானுக்கு அலுவல் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று வங்காளதேசத்திற்கு அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொண்டுள்ளார்.

பிரதமரின் சிறப்பு விமானம், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் வங்காளதேசத் தலைநகர் டாக்காவில் Hazrat Shahjalal அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

விமான நிலையத்தில் பிரதமரை, வங்காளதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் Dr Muhammad Yunus மற்றும் அந்நாட்டின் முக்கிய அரசாங்க அதிகாரிகள் எதிர்கொண்டு வரவேற்றனர். உடன் வங்காளதேசத்திற்கான மலேசியத் தூதர் Haznan Muhamad Hashim காணப்பட்டார்.

வங்காளதேச இராணுவப்படையின் 19 பீராங்கி குண்டுகள் முழுங்க, பிரதமருக்கு சிறப்பு கம்பளத்தில் மகத்தான வரவேற்பு நல்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS