கோலாலம்பூர், அக்டோபர் 04-
GLOBAL IKHWAN SERVICES AND BUSINESS HOLDINGS நிறுவனம் தொடர்பில் போலீசார் மேற்கொண்டு வரும் விசாரணையில் அந்த நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி உட்பட 24 பேருக்கு எதிரான தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதுன் ஹுசைன் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான 20 சமூக நல இல்லங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது 402 சிறார்கள் மீட்கப்பட்டது தொடர்பில் அந்த 24 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கட்டாயத் தொழிலாளர்கள் அமர்த்தப்பட்டது தொடர்பில் அந்த 24 பேருக்கு எதிரான விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐஜிபி குறிப்பிட்டார்.