பெர்சத்து கட்சித் தேர்தலில் முகைதீன் வெற்றி பெற்றார்

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 04-

பெர்சத்து கட்சித் தேர்தலில் அதன் நடப்புத் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் இன்று போட்டியின்றி வெற்றி பெற்றார்.

இதேபோன்று அக்கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் – னும் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெர்சத்து கட்சியின் 2024 முதல் 2027 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டு கால தவணைக்கான உயர்மட்ட பொறுப்புகளுக்கு இவ்விருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கட்சியின் தேர்தல் குழு துணைத் தலைவர் சைபுல் அட்லி அர்ஷத் அறிவித்தார்.

பெர்சத்து கட்சியின் மகளிரணித் தலைவியாக கடந்த இரண்டு தவணைக்காலம் பொறுப்பு வகித்து வந்த முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ ரினா முகமட் ஹாருன் அப்பதவிக்கு மீண்டும் போட்டியிடாததைத் தொடர்ந்து கட்சியின் புதிய மகளிரணித் தலைவியாக டத்தோ மாஸ் எர்மியேயாதி சம்சுதீன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS