கோலாலம்பூர், அக்டோபர் 04-
அரச மலேசிய போலீஸ் படை, Negotiator Cell என்ற பிரத்தியேக பேச்சுவார்த்தைக்குழு ஒன்றை இன்று அதிகாரப்பூர்வமாக நிறுவியுள்ளது.
நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையும் எதிர்கொள்ளும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகளுடன் அரசாங்கத் தரப்பினர் தொடர்பு கொண்டு, பேச்சுவார்த்தை நடத்துவதில் இந்த Negotiator Cell குழுவினர் முக்கியப்பங்காற்றுவர்.
இந்த குழுவினர், யார், யாருடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்று முகம் தெரியாத பாணியில் செயல்படும் SLEEPER CELL போன்று செயல்படுவார்கள் என்று போலீஸ் படைத்துணைத் தலைவர் Datuk Seri Ayub Khan Mydin Pitchay தெரிவித்தார்.
பயங்கரவாதி தரப்பினர் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தும் அளவிற்கு இந்த குழுவினர் போதுமான அனுபவத்தையும் பயிற்சியையும் பெற்றுள்ளனர் என்று அயோப் கான் குறிப்பிட்டார்.
