கோலாலம்பூர், அக்டோபர் 05-
சிலாங்கூர், கெடா மற்றும் பேரா ஆகிய மூன்று மாநிலங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவில் நிலவிய சூழலை விட இன்று இந்த மூன்று மாநிலங்களிலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சம் புகுவதற்கு ஏதுவாக மேலும் சில நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக வெள்ளத்துயர் துடைப்பு மேலாண்மை குழுவினர் தெரிவித்துள்ளனர்.