வலுவான ஒருமைப்பாடு அவசியமாகும்

ஷா ஆலம், அக்டோபர் 05-

நாட்டின் அனைத்து 9 மலாய் ஆட்சியாளர்களிடையே வலுவான ஒருமைப்பாடு இருக்க வேண்டும் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷாவலியுறுத்தியுள்ளார்.

ஆட்சியாளர்கள் அனைவரும் ஒரே அணியாக ஒத்துழைக்க வேண்டும். மக்கள் எந்தப் பிரச்னையை எதிர்நோக்கினாலும் அந்தச் சமயத்தில் அவர்கள் ஒருவர் மற்றவருக்கு எப்போதும் உதவிட வேண்டும் என்று சுல்தான் கேட்டுக்கொண்டார்.

சமயப் பிரச்னைகள் உள்ளிட்ட மற்ற பிரச்னைகளையும் இப்போது எதிர்நோக்கும் சூழ்நிலையில், மக்களின் நல்வாழ்வை மலாய் ஆட்சியாளர்கள் பாதுகாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மலாய் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட உணர்ச்சிப்பூர்வப் பிரச்னைகள் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சுல்தான் வலியுறுத்தினார்.

சிலாங்கூர் அரச அலுவலகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் சிலாங்கூர் சுல்தான் இதனை வலியுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS