பத்து காஜா, அக்டோபர் 05-
பேரா மாநில அரங்கில் பேராக் எஃப்சி அணிக்கும், ஜோகூர் தாருல் தாஜிம் – அணிக்கும் இடையில் நடைபெறவிருக்கும் Super league கால்பந்து போட்டியில் பாதுகாப்பை உறுதிசெய்வவதற்கு சுமார் 500 போலீஸ்காரர்கள் கடமையில் அமர்த்தப்படுவர் என்று பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மேட் அரிஸ் தெரிவித்தார்.
இந்த ஆட்டத்தை காண வருகின்றவர்கள் அரங்கிற்கு வெளியே மோதலில் ஈடுபடுவதை முற்றாக தவிர்க்க வேண்டும் என்று இரு அணியினரின் ஆதரவாளர்களையும் டத்தோ அசிசி கேட்டுக்கொண்டர்.