டாக்கா, அக்டோபர் 05-
அண்மையில் வங்காளதேசத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியினால் மலேசியாவில் வேலை செய்வதற்கான வாய்ப்புகளை இழந்துள்ள வங்காளத்தேசத் தொழிலாளர்களின் விண்ணப்பங்கள் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் உறுதி அளித்துள்ளார்.
மலேசியாவில் பணியாற்றுவதற்கு நிபுணத்துவத்துவ தொழில்துறையை சார்ந்தவர்கள் செய்து கொண்ட விண்ணப்பம், வங்காளதேசத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியினால் அந்த வாய்ப்பை இழந்துள்ளனர்.
அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று வங்காளதேச அரசாங்கம் செய்து கொண்டுள்ள முறையீட்டைத் தொடர்ந்து இவ்விவகாரம் பரிசீலிக்கப்படும் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
வங்காளதேசத்திற்கு அலுவல் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், வங்களாதேசத்தின் புதிய இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முஹம்மது யூனுஸ் – சுடன் நேரடி சந்திப்பு நடத்தியப்பின்னர் இருவரும் இணைந்து நடத்திய பத்திரிகையாளர் சந்திப்புக்கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.