பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 05-
உலு சிலாங்கூரில் கோலகுபுபாருவிற்கும், கேப்பிற்கும் (GAB ) இடையிலான சாலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் கோலகுபு பாருவிலிருந்து பிரேசர் மலைக்கு செல்லும் கேப் சாலை போக்குவரத்திற்கு மூடப்பட்டது. அந்த சாலையில் சுமார் 20 மீட்டர் தூர அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனத்த மலையின் காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
சாலையில் மலைப்போல் குவிந்திருந்த பாறைகள் மற்றும் மண்ணை அகற்றும்பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு, சாலை சுத்தம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலை 7.50 மணிக்கு அந்த சாலை அனைத்துப் போக்குவரத்திற்கும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக உலு சிலாங்கூர் பொதுப் பணி இலாகா தெரிவித்துள்ளது.