ஷா ஆலம், அக்டோபர் 08-
இரும்புச்சட்டியை கழுவுதற்கு சாக்கடை கால்வாய் நீரைப் பயன்படுத்திய ரொட்டிச் சானாய் வியாபாரி ஒருவரின் அருவறுக்கத்தக்க செயல் தொடர்பான காணொளி, சமூக வலைத்தளங்களில் வரைலானத்தை தொடர்ந்து அந்த வியாபாரி தற்போது பொது மக்களின் பலத்த கண்டனத்திற்கு ஆளாகி வருகிறார்.
ரொட்டிச் சானாய் வியாபாரியின் முகசுளிக்க வைக்கும் இந்த செயலை, சமூக ஆர்வலர் ஒருவர் தனது கைப்பேசியில் பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ததைத் தொடர்ந்து, அந்த ரொட்டிச் சானாய் வியாபாரி யார், எங்கே உள்ளார் என்று அவரின் முகவரியை கேட்டு, வலைத்தளவாசிகள் தற்போது வறுத்து எடுக்க தொடங்கியுள்ளனர்.
எனினும் அந்த ரொட்டிச் சானாய் வியாபாரி வர்த்தகம் செய்யும் பகுதியின் விபரம், வெளியிடப்படவில்லை என்ற போதிலும் சாக்கடை கால்வாய் நீரை அவர் பயன்படுத்திய போது, பின்னணியில் உள்ள சில காட்சிகளை அடிப்படையாக கொண்டு அமலாக்க அதிகாரிகள், அவரின் ரொட்டிச் சானாய் கடையை நெருங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
24 விநாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளியை மிக குறுகிய நேரத்திலேயே அரை லட்சம் பேர் பார்வையிட்டுட்ளளனர் என்பதுடன் பலர், அந்த ரொட்டிச் சானாய் விபாயாரியை சரமாரியாக திட்டி, கருத்துகளை பதிவிட்டு, தங்களின் ஆத்திரத்தை தீர்த்து வருகின்றனர்.