கோலாலம்பூர், அக்டோபர் 08-
LRT, கிளானா ஜெயா வழித்தடத்தில் ஆடவர் ஒருவர், ரயில் இருப்புப்பாதைக்குள் அத்துமீறி நுழைந்து, ரயில் சேவைக்கு பாதிப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை செய்து வருவதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் போலீசார், புகார் ஒன்றைப் பெற்றுள்ளனர்.. குற்றவியல் சட்டம் 447 பிரிவின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று திங்கட்கிழமை, யாரும் எதிர்பாராத வண்ணம் அந்த ஆடவர், இருப்புப்பாதைக்குள் நுழைந்ததன் காரணமாக கோலாலம்பூர் மஸ்ஜித் ஜமேக் – கிற்கும், Bangsar- க்கும் இடையிலான LRT ரயில் சேவை நிலைக்குத்தியது என்று ஏசிபி சுலிஸ்மி தெரிவித்தார்.
எனினும் அத்துமீறி நுழைந்த அந்த ஆடவர் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.