பகாங் சுல்தானின் புதல்வருக்கு திருமணம்

குவாந்தன்,அக்டோபர் 08-

மேன்மை தங்கிய பகாங் சுல்தானின் புதல்வர் தெங்கு ஆரிஃப் பெந்தஹாரா தேங்கு முஹம்மது இஸ்கந்தர் ரியாதுதீன் ஷா அல் சுல்தான் அப்துல்லா -விற்கும், இணையர் தேங்கு நடஸ்ய புத்தேரி தேங்கு அட்னான் – க்கும் இடையிலான திருமண விழா மூன்று நாட்களுக்கு மிக கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.

வரும் அக்டோபர் 24,25 மற்றும் 27 ஆகிய மூன்று தினங்களுக்கு அரச திருமண வைபவம் குவந்தான், இஸ்தானா அப்துல்அஜிஸ் அரண்மனையில் நடைபெறவிருப்பதாக பகாங் சுல்தான் முகநூலில் தெரிவிக்கப்பட்டுட்ளளது.

தங்கள் புதல்வரின் திருமண வைவபத்தையொட்டி பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா, பகாங் அரசியார் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் சிறப்பு வைபங்களிலும் கலந்து கொள்ளவிருக்கின்றனர். பகாங் பட்டத்து இளவரசர், தெங்கு மஹ்கோடா பஹாங் தெங்கு ஹசனல் இப்ராஹிம் ஆலம் ஷா – வும் இந்நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

WATCH OUR LATEST NEWS