காஜாங் ,அக்டோபர் 08-
பள்ளி மாணவர்களிடையே நிலவிவரும் பகடிவதைச் சம்பவங்களுக்கு அரசாங்கம் ஒரு போதும் விட்டுக்கொடுக்கும் போக்கைக் கடைப்பிடிக்காது என்று கல்வி அமைச்சர் திட்டவட்டமாக ஃபத்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.
யாருடைய பிள்ளையாக இருந்தாலும் பகடிவதைச் சம்பவம், பகடிவதையாகவே கருதப்படும். இதில் அமைச்சர் உட்பட எந்தவொரு பிரமுகரின் மகன் ஈடுபட்டாலும்கூட அது பகடிவதையாகவே வகைப்படுத்தப்படும் என்று அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.
மாணவர்கள் மத்தியில் நிலவு பகடிவதை விவகாரத்தில் கல்வி அமைச்சு ஒரு போதும் விட்டுக்கொடுக்கும் போக்கை கடைப்பிடிக்காது. இதுவே கல்வி அமைச்சின் நிலைப்பாடாகும் என்று அவர் விளக்கினார்.