குவாந்தன்,அக்டோபர் 08-
கேமரன்மலை, கம்போங் சுங்கை ரூயில் என்ற பகுதியில் நேற்று திங்கட்கிழமை நிகழ்ந்த திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர், சுங்கை ரூயில் சமூக மையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 11 ஆண்கள், 10 பெண்கள், நான்கு சிறார்கள் மற்றும் குழந்தைகள் என 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரி முதலியவற்றால் தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கேமரன்மலை பேரிடர் நிர்வாகக்குழு இன்று அறிவித்துள்ளது.