பதிநான்கு ஆண்டுகளுக்கு முன்பு கோடீஸ்வ டத்தோ சோசிலாவதி லாவியா மற்றும் அவரின் மூன்று உதவியாளர்கள் மிக கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டு, உடல்கள் எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பந்திங்கைச் சேர்ந்த முன்னாள் வழக்கறிஞர் N. பத்மநாபன் மற்றும் அவரின் பண்ணை வீட்டுத்தொழிலாளி T. தில்லையழகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் மறுபடியும் உறுதி செய்துள்ளது.
உயர்நீதிமன்றம், அப்பீல் நீதிமன்றம் மற்றும் கூட்டரசு நீதிமன்றம் ஆகியவற்றில் தங்களுக்கு எதிரான தூக்குத்தண்டனை நிலைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது தூக்குத்தண்டனை நிறைவேற்றத்திற்கு காத்திருக்கும் 55 முன்னாள் வழக்கறிஞர் பத்மநாபன் மற்றும் தில்லையழகன் ஆகியோர், தங்களுக்கு எதிரான தூக்குத்தண்டனை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று கோரி, ஆகக்கடைசி முயற்சியாக செய்து கொண்ட விண்ணப்பத்தை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது.
மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நாட்டின் தலைமை நீதிபதி துன் தேங்கு மைமுன் துவான் பாய் , அந்த இருவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை மறுபரிசீலனை செய்வதற்கு எந்தவொரு காரணமும் இல்லை என்றார்.
இருவருக்கும் தூக்குத்ண்டனை விதிக்கப்பட்டு இருப்பது ஏற்புடையதே என்று தலைமை நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
இந்த வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட மற்றொரு நபரான 44 வயது R. காத்தவராயன், தாம் செய்து கெண்ட மேல்முறையீட்டு மனுவை இறுதி நேரத்தில் மீட்டுக்கொண்டுள்ள வேளையில் மற்றொரு விண்ணப்பத்தை சார்வு செய்யவிருப்பதாக அவரின் வழக்கறிஞர்ல தீபா கோயா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2023 ஆம் ஆண்டு தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட்ட சட்டத்தின் கீழ் இந்த மூவரும் தங்களின் தூக்குத்ண்டனையை மறுபரிசீலனை செய்யக்கோரி விண்ணப்பம் செய்து இருந்தனர்.
ஒப்பனைப்பொருட்கள் விற்பனைத்துறை தொழில் அதிபரான 47 வயது டத்தோ சோசிலாவதி, அவரின் கார் ஓட்டுநர் 44 வயது கமருடின் சம்சுடின், 38 வயது வங்கி அதிகாரி நூர்ஹிஷாம் முகமது மற்றும் ஒரு வழக்கறிஞரான 32 வயது கமில் அப்துல் கரீம் ஆகியோரை கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி சிலாங்கூர், பந்திங், தஞ்சோங் செபட், தஞ்சோங் லயாங் – கில் உள்ள பத்மநாபனின் பண்ணை வீட்டில் அடித்து, கொலை செய்து, நால்வரின் உடல்களையும் தீயிட்டு கொளுத்தியதாக பத்மநாபன் உட்பட நால்வர் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
பத்மநாபன், தில்லையழகன், காத்தவராயன் மற்றும் 33 வயது மதன் ஆகியோர் குற்றவாளியே என்று கடந்த 2015 ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்த ஷா ஆலாம் உயர் நீதிமன்றம், அந்த நால்வருக்கும் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.