பெண் வழக்கறிஞர் மீது குற்றச்சாட்டு

ஈப்போ , அக்டோபர் 08-

ஒரு பேரங்காடி மையத்திற்கு வெளியே தங்கள் வாகனத்திற்கான கார் நிறுத்தும் இடத்தை கைப்பற்றுவதில் ஏற்பட்ட வாய் தகராற்றில் குடும்பமாது ஒருவரை கண்மூடித்தனமாக தாக்கி காயப்படுத்தியதாக பெண் வழக்கறிஞர் ஒருவர், ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

72 வயது கோ சுவான் போய் என்ற அந்த பெண் வழக்கறிஞர், மாஜிஸ்திரேட் எவாஞ்சலின் சைமன் சில்வராஜ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி மாலை 6.46 மணியளவில் பேரா, உலு கிந்தா-வில் உள்ள ஒரு Pasaraya- கார் நிறுத்தும் இடத்தில் ஒரு சீக்கிய மாதுவான 35 அஷ்விந்தர் கவுர் என்பவரை கடுமையாக தாக்கி காயம் விளைவித்தாக அந்த பெண் வழக்கறிஞர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறை, அல்லது 2 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 323 பிரிவின் கீழ் அந்த வழக்கறிஞர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து அந்த வழக்கறிஞர் விசாரணை கோரியைத் தொடர்ந்து அவரை தலா 500 வெள்ளி ஜாமீல் விடுவிக்க மாஜிஸ்திரேட் அனுமதி அளித்தார்.

WATCH OUR LATEST NEWS