ஓர் ஒற்றைப்புள்ளியில் மலேசியா உள்ளது

கோலாலம்பூர், அக்டோபர் 08-

மலேசியா ஓர் உத்தரவாதமிக்க வளர்ச்சி நிலையை நோக்கி முன்னேறிச் செல்லப் போகிறதா? அல்லது முன்னேற்றமின்றி பின்னோக்கிச் செல்லப் போகிறதா? என்பது குறித்து முடிவு செய்ய வேண்டிய ஓர் இக்கட்டான நிலையில் ஓர் ஒற்றைப்புள்ளியுடன் இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

எனினும் மக்களின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு மலேசியாவை ஒரு வளர்ச்சிப்பாதையை நோக்கி, முன்னேடுக்க வேண்டும் என்ற திடமான உறுதிப்பாட்டில் தாம் இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

நாடு அடையப்பெற்றுள்ள நடப்பு வளர்ச்சி நிலையைக் கண்டு பெருமிதம் கொள்வதற்கு ஒன்றுமில்லை என்ற போதிலும் மக்களின் பெரும்பகுதியின் இன்னமும் சிரமத்தில் இருப்பதை தம்மால் உணர முடிவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS