புத்ராஜெயா,அக்டோபர் 09-
வடகிழக்குப் பருவமழை அடுத்த மாதம் தொடங்கும் என்று ஆருடம் கூறப்பட்ட வேளையில் அது ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இம்மாதம் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
வட கிழக்குப் பருவமழையினால் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனை எதிர்கொள்வதற்கு தயாராகும்படி சம்பந்தப்பட்ட அரசாங்க ஏஜென்சிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஜாஹிட் குறிப்பிட்டார்.
வெள்ளப்பேரிடமை எதிர்கொள்வதற்கு மாநில மற்றும் மாவட்ட அளவிலான வெள்ளப் பேரிடர் நிர்வாகக்குழுவுடன் மத்திய அரசாங்கம் ஒத்துழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.