சுங்கை பூலோ,அக்டோபர் 09-
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி சுபாங் பெஸ்டாரி- யில் உள்ள கடை ஒன்றில் பெண் இளம் பெண் ஒருவரிடம் ஆபாச சேட்டைப்புரிந்த நபரை சுங்கை பூலோ மாவட்ட போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
18 வயது பெண் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த நபர், தேடப்பட்டு வருவதாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் முகமது ஹாபிஸ் முஹம்மது தெரிவித்தார்.
பிற்பகல் 1.34 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் புகார் கொடுத்தப்பெண்ணும், அவரின் தோழியிலும் உணவகத்தி அமர்ந்திருந்தனர்.
அப்போது, தங்கள் எதிரே வந்து அமர்ந்த அந்த நபர், யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென்று மிக ஆபாசமாக நடந்து கொண்டதாக அந்தப் பெண் தனது போலீஸ் புகாரில் குறிப்பிடுள்ளார் என்று முகமது ஹாபிஸ் குறிப்பிட்டுள்ளார்.