ஜார்ஜ் டவுன், அக்டோபர் 09-
பினாங்கு மக்கள் வெகுகாலமாக எதிர்பார்த்திருந்த LRT ரயில் திட்ட நிர்மாணிப்புப்பணி, வரும் டிசம்பர் மாதம் தொடங்கவிருக்கிறது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.
இதற்கான பூமிவேலைகள் டிசம்பரில் ஆரம்பமாகும். முதல் எல்.ஆர்.டி.நிலையம், லெபு மாக்கல்லம்-மில் தொடங்கும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார். பினாங்கு மாநிலத்தில் குறிப்பிடத்தக்க போக்குவரத்து சேவையாக அமையவிருக்கும் LRT, 29 கிலோ மீட்டர் தூரம் சுற்றுளவை கொண்டு இருக்கும்.
பெருநிலத்தில் பினாங்கு சென்ட்ரல்/ லிருந்து லெபு மாக்கல்லம் வாயிலாக பினாங்கு தீவை இணைக்கும். பலகோடி வெள்ளி செலவிலான இந்த திட்டம் கோம்தார், பந்தர் ஸ்ரீ பினாங், சுங்கை பினாங், கிழக்கு ஜெலுடோங், The Light, Gelugor, Jalan University,சுங்கை துவா என பல நிலையங்களை இணைக்கும் வல்லதாகும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.