ஆசியான் உச்சநிலை மாநாடு, Laos- ஸில் இன்று தொடங்கியது

வியன்டியான்,அக்டோபர் 09-

ஆசியானின் 44 மற்றும் 45 ஆவது உச்சநிலை மாநாடு, இன்று அக்டோபர் 9 ஆம் தேதி காலையில் Laos தலைநகர் Vientiane- னில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்த மாநாட்டில் ஆசியானின் 10 உறுப்பு நாடுகளின் உயர் நிலைத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஆசியான் மாநாட்டிற்கு உபசரணை நாடு என்ற முறையில் Laos தலைமையேற்றுள்ளது. Vientiane- னில் உள்ள தேசிய மாநாட்டு மையத்தில் ஆசியான் தலைவர்கள் ஒன்றுகூடியுள்ளனர். இந்த மாநாட்டை Laos அதிபர் Thongloun Sisoulith அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார். மலேசியா சார்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.

டிஜிட்டல் மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு, புதிய தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், நாடு கடந்த குற்றங்கள், தென்சீனா கடலில் நிலவும் பதற்ற நிலை, மியன்மார் மற்றும் மத்திய கிழக்கில் நிலவி வரும் நெருக்கடிகள் உள்ளிட்ட பல விவகாரங்களை உறுப்பு நாடுகள் அலசிய ஆராயும் ஒரு களமாக இந்த மாநாடு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS