செபரங் பேராய், அக்டோபர் 09-
போலீஸ்காரரை தகாத வார்த்தையால் திட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்ட லோரி ஓட்டுநர் ஒருவருக்கு பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 100 வெள்ளி அபராதம் விதித்தது.
37 வயது S. ஹரிராம் என்ற அந்த லோரி ஓட்டுநர், மாஜிஸ்திரேட் முகமட் ஹரித் முகமட் மஸ்லான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, மொழிப்பெயர்ப்பாளரின் உதவியுடன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி மாலை 4.20 மணியளவில் புக்கிட் மெர்தாஜம், பிறை, Jalan Baru,-வில் TNB வீடமைப்புப்பகுதிக்கு அருகில் போலீஸகாரரை நோக்கி வேண்டுமென்றே தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக ஹரிராம் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 100 வெள்ளி அபராம் விதிக்க வகை செய்யும் 1955 ஆம் ஆண்டு குற்றவியல் சட்டத்தின் கீழ் ஹரிராம் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.
தனக்கு சம்மன் வழங்கியதை சகித்துக்கொள்ள முடியாமல், அந்த போலீஸ்காரருக்கு ஆத்திரமூட்டும் செயலில் ஹரிராம் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.