பாலியல் வழக்கில் மேல்முறையீட்டை நிராகரித்தது நீதிமன்றம்

கோலா திரெங்கானு, அக்டோபர் 09-

7 மாத கர்ப்பிணி மாதுவை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக ஒன்பது ஆண்டு சிறை மற்றும் மூன்று பிரம்படித் தண்டனை விதிக்கப்பட்ட தொழிலாளர் ஒருவர், தண்டனையை குறைக்கும்படி செய்துகொண்ட மேல்முறையீட்டை கோலத்திரெங்கானு உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

முகமது சுக்ரி ஜாஃபர் என்ற 43 வயது நபருக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் விசாரணை நீதிபதி எந்த தவற்றையும் புரியவில்லை என்று உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ ஹாசன் அப்துல் கானி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

அந்த தொழிலாளி கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி காலை 10 மணியளவில் கேமாமன், சுக்கை, ஜாலான் மாக் சில்லி என்ற ஓர் ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ள வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS