பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 09-
நாட்டில் செயல்படும் அனைத்து உணவகங்களும் மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வகையில் தூய்மையைப் பேண வேண்டும். இல்லையேல், உணவகங்கள் மூடப்படுவது உட்பட கடும் நடவடிக்கைகக்கு இலக்காக நேரிடும் என்று சுகாதார அமைச்சு இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
கால்வாய் நீரில் இரும்புச்சட்டியை கழுவுது, சோற்றுப்பானை துடைப்பதால் சுத்தம் செய்வது போன்ற அறுவறுக்கத்தக்க செயல்கள், வளர்ந்து வரும் மலேசியா போன்ற நாடுகளில் நடக்கக்கூடாத ஒன்றாகும்.
2009 ஆம் ஆண்டு உணவு சட்டத்தின் கீழ் நடப்பு விதிமுறைகளை பின்பற்றாத உணவகங்கள் மூடுவிழாவிற்கு தயாராக இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.