இம்மாதம் பிற்பகுதியில் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு மலாயன் ரயில்வே பெர்ஹாட்டான KTM, கோலாலம்பூர் செண்ரல் நிலையத்திற்கும், பதங் பெசார்- ருக்கும் இடையில் கூடுதலாக இரண்டு ETS மின்சார ரயில் சேவையை வழங்கவிருக்கிறது.
வரும் அக்டோபர் 30 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 3 ஆம் தேதி வரையில் 5 நாட்களுக்கு இந்த கூடுதல் ரயில் சேவை அமலில் இருக்கும் என்று KTM வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தீபாவளி பொதுவிடுமுறைக்கு அடுத்து வார இறுதிநாள் விடுமுறை தொடர்வதால் பயணிகளின் அதிகரிப்பை கருத்தில் கொண்டும், அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் இந்த கூடுதல் ETS சேவை மேற்கொள்ளப்படவிருப்பதாக KTM அறிவித்துள்ளது.
