விமானி நடுவானில் மரணமடைந்ததால் விமானம் நியூயார்க்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது

இஸ்தான்புல் , அக்டோபர் 10-

துருக்கி ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, நடுவானில் பறந்து கொண்டிருந்த போது அதன் விமானி இருக்கையிலிருந்து சரிந்து உயிரிழந்தார். இதனால் விமானம், நியூயோர்க்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இச்சம்பவம் நேற்று புதன்கிழமை நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டது.

TK204 என்ற பதிவு எண்ணைக்கொண்ட துருக்கி ஏர்லைன்ஸின் AIRBUS விமானம் A350, கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 204 பேருடன் அமெரிக்கா, வாஷிங்டனில் உள்ள துறைமுக நகரமான சியாட்டில் – லிருந்து புறப்பட்டு, துருக்கியின் இஸ்தான்புல்- க்கு சென்று கொண்டிருந்த பாது இந்த சம்பவம் நிகழ்ந்தது என்று துருக்கி ஏர்லைன்ஸின் விமானச் செய்தித் தொடர்பாளர் யாஹ்யா உஸ்துன் தெரிவித்தார்.

விமானப் பயணத்தின் போது 59 வயதுடைய Iicehin Pehlivan என்ற விமானி திடீரென்று மயக்கம் அடைந்து இருக்கையிலிருந்து சரிந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு உடனடியாக அவசர சிகிக்சை அளிக்கப்பட்டது. எனினும் விமானத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு விமானம் காலை 6 மணியளவில் நியூயோர்க்,ஜான் எஃப். கென்னடி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க வேண்டிய கட்டாயம் துணை விமானிக்கு ஏற்பட்டதாக அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS