சிங்கப்பூர்,அக்டோபர் 10-
மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் நிலுவையில் இருந்து வரும் இன்னும் தீர்க்கப்படாத சில விவகாரங்களை தீர்த்துக்கொள்வதற்கு அவ்விரு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன.
நிலுவையில் உள்ள விவகாரங்களை தீர்த்துக்கொள்வதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்- கிற்கும் இடையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற சந்தப்பின் போது இந்த இணக்கம் காணப்பட்டுள்ளது
Lous தலைநகர் Vientiane-வில் நடைபெற்று வரும் ஆசியான் நாடுகளுக்கான 44 மற்றும் 45 ஆவது உச்சநிலை மாநாட்டில் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் சுமார் 40 நிமிட சந்திப்பு நடைபெற்றது..
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்- வுடனான இந்த சந்திப்பில் பலதரப்பட்ட விவகாரங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். எனினும் அதன் மேல் விவரங்களை பிரதமர் விவரிக்கவில்லை.