டங்கன்,அக்டோபர் 10-
மாது ஒருவர் செலுத்திய SUV வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளோட்டிகளையும், பாதசாரிகளையும் மோதியதில் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டுங்குன் கிளையைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் உயிரிழந்த வேளையில் மேலும் ஒரு மாணவன் கடும் காயகளுக்கு ஆளானான்..
இவ்விபத்து நேற்று இரவு 8 மணியளவில் திரெங்கானு, Dungun – னில் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் நிகழ்ந்தது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு மாணவர்களும், நடந்து சென்று கொண்டிருந்த மேலும் இரண்டு மாணவர்களும் சம்பந்தப்பட்டிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இதில் 20 க்கும் 25 க்கும் இடைப்பட்ட மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே மாண்டனர். அந்த மூன்று மாணவர்களும் அப்பல்கலைக்கழகத்தின் கணக்கியல் துறை மாணவர்கள் என்று அடையாளம் கூறப்பட்டது. சவப்பரிசோதனைக்காக அந்த மூன்று மாணவர்களின் உடல்களும் கோலத் திரெங்கானு சுல்தானா நூர் ஜாஹிரா மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட மாணவர்களை வாகனத்தில் மோதி தள்ளிய 40 வயது மாது, மனோரீதியாக பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
