பேரா மாநில மஇகா பொறுப்பாளர்கள் அறிவிப்பு

ஈப்போ , அக்டோபர் 10-

மஇகா உதவித் தலைவர் டான்ஸ்ரீ எம். இராமசாமி தலைமையிலான பேரா மாநில மஇகா தொடர்புக்குழுவின் புதிய பொறுப்பாளகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மஇகாவின் முன்னள் தேசியப் பொருளாளரான டான்ஸ்ரீ இராமசாமி, கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி பேரா மாநில மஇகா தொடர்புக்குழுத் தலைவராக கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ S.A. விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்டார்.

பேரா மாநில மஇகாவிற்கு தலைமையேற்று வழிநடத்திய டத்தோ வி. இளங்கோவிற்கு பதிலாக டான்ஸ்ரீ இராமசாமி அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் டான்ஸ்ரீ இராமசாமி தலைமையிலான பேரா மாநில மஇகாவின் புதிய பொறுப்பாளர்களில் தைப்பிங் மஇகா தொகுதி தலைவர் எம். வீரன், மாநில தொடர்புக்குழுவின் ப துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புக்கிட் கந்தாங் மஇகா தொகுதி தலைவர் ஜி. சண்முகவேலு, மாநிலத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக டான்ஸ்ரீ இராமசாமி அறிவித்துள்ளார்.

மஇகாவின் அமைப்புச்சட்டத்திற்கு ஏற்ப கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ S.A. விக்னேஸ்வரனுடன் கலந்து ஆலோசிக்கப்பட்ட பின்னர் இவர்களின் நியமனம் அமைந்துள்ளதாக டான்ஸ்ரீ இராமசாமி குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS