அல்தான்துயாவை கொலை செய்த அந்த முன்னாள் போலீஸ்காரரை மன்னிக்கிறோம் / குடும்பத்தினர் ஒப்புதல் வாக்குமூலம்

புத்ராஜெயா,அக்டோபர் 10-

சம்பந்தப்பட்ட போலீஸ்காரருக்கு தூக்குத் தண்டனை ரத்து / 40 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஷா ஆலாம், புன்சாக் ஆலம் -மில் நிகழ்ந்த மங்கோலியா நாட்டின் முன்னாள் மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபு - வை கொலை செய்தற்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் போலீஸகாரை, தாங்கள் மன்னிப்பதாக அந்தப் பெண்ணின் குடும்பத்தினர், கூட்டரசு நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அரச மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்த முன்னாள் அதிரடி போலீஸ் அதிகாரியான அஜிலா ஹத்ரி என்ற முன்னாள் போலீஸ்காரருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை சிறைத் தண்டனையாக மாற்றுவதற்கு அந்த உச்ச நீதிமன்றத்தில் செய்து கொண்டுள்ள விண்ணப்பம், இன்று விசாரணைக்கு வந்த போது, அந்த மங்கோலிய குடும்பத்தினர், வழங்கியுள்ள ஒப்புதல் கடிதம், நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.

28 வயதுடைய அல்தான்துயா, கடந்த 2006 ஆம் ஆண்டு, கொலை செய்யப்பட்டு, அவரின் உடல் வெடிகுண்டினால் தகர்த்தப்பட்ட நிலையில் ஷா ஆலாம் புன்சாக் ஆலம்-மில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த கொலைக்கு காரணமான இரண்டு போலீஸ்காரர்களில் ஒருவரான அஜிலா ஹத்ரி- க்கு ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்த போது அந்த தீர்ப்பை வரவேற்ற அல்தான்துயா குடும்பத்தினர், இன்று அந்த போலீஸ்காரரை மன்னிப்பதாக வாக்குமூலம் தந்துள்ளனர்.

தண்டனையை குறைக்கும்படி அந்த போலீஸ்காரர் செய்து கொண்டுள்ள விண்ணப்பம், நாட்டின் தலைமை நீதிபதிதேங்கு மைமுன் துவான் மாட் முன்னிலையில் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் விசாரிக்கப்பட்டது.

வழக்கை செவிமடுத்த மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினர், சம்பந்தப்பட்ட முன்னாள் போலீஸ்காரருக்கு 40 ஆண்டு சிறை மற்றும் 12 பிரம்படித்தண்டனை விதிப்பதாக தீர்ப்பு அளித்தனர்.

WATCH OUR LATEST NEWS