பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட ரத்தன் டாடா உடல்… தேசிய கொடி போர்த்தி மரியாதை

அக்டோபர் 10-

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், இந்தியாவின் இரண்டாவது உயரிய சிவிலியன் விருது பத்ம விபூஷண் விருது பெற்றவருமான  ரத்தன் டாடா மும்பையில் நேற்று நள்ளிரவு (புதன்கிழமை)  காலமானார். வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 86. 

தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மகாராஷ்டிரா அரசு இன்று (அக்.10) ஒரு நாள் துக்கம் அனுசரிப்பதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார். 

WATCH OUR LATEST NEWS